about me? wat can i say? i am a tamil!!! AND i'm proud 2 b 1. dats all!
Interests
collecting stamps/ reading books /love playing basketball, listening 2 music 24 hrs.lol, specially tamil!!brap brap^^,playn wit ma cuzns,dats all i fnk!
Favorite Movies
Bend it like Beckham ma favorite.i know its old but still like it.Also Mr Deeds....mmmm! watelse..oh yh.DEVDAS!! styll old.OLD IS GOLD U C!!
Favorite TV Shows
CSI MIAMI!! definitely!! not sure about da others.
Favorite Books
all da books by bali rai (un)arranged marriage....and Rani & Sukh...so far i read those two and its really really good.
தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் இந்த நாட்டில் பங்கெடுக்கும் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஆலயங்களுக்குச் சென்று நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் வரவேண்டும் என பிரார்த்தியுங்கள். வருகிற ஆண்டு சமாதானமும், நம்பிப்கையும் சுபீட்சமும் நிலவ பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்
வனவாசம் காட்டில் அல்ல. வெளி நாடுகளில். ஈழம் கண்ணில் விடியும் வரை எம் இனம் ஏற்றுக்கொண்ட வேஷம் இது. காலச் சுழற்சியில் காத்திருந்து கலைந்த கனவுகள் ஏராளம் ஏராளம். நினைவுகள்... நின்மதிகள்... சொந்த பந்தங்கள் எல்லாமேதான். நான் வாழ்ந்த அந்த அழகான கிராமம் இப்போ அழிந்துவிட்ட கிராமமாம். அகழ் ஆராய்வு செய்கிறார்களாம். எத்தனை ஆயிரம் கனவுகளை அதற்குள் புதைத்துவிட்டு புலம் பெயர்ந்தோம். அகதிகளாய் அநாதைகளானோம். எம் கனவுகளை அகழ்ந்து யார்... எப்போ புதுப்பிப்பார்கள்? ஒரு சிறு நூல் நுனியில் உயிர் ஊசலாட தலை தெறிக்க தடம் மாறினோமே. மயிரளவு கூட உயிருக்கு மரியாதை இல்லாமல் மரித்த நிலையில் மிஞ்சும் உயிரைத் தூக்கிக் கொண்டு தாய் மண் விட்டுத் தூரமாகி தஞ்சம் கேட்டுத் தடுக்கிய நாட்டில் மிஞ்சிய மானமும் மலையேறி விட்டதே. முடிவேயில்லாத குளிர்ந்த இரவுகளின் மடியில் மிச்சம் மீதியிருந்த மன உணர்வுகளும் மடிந்து விட்டன. இப்போதைய தேவை வேலை...வேலை பணம்...பணம். காலை முதல் மாலை வரை களைத்து விழும் உடலுக்கு உணவை ஒதுக்கினாலும் கனவோடு ஓர் படுக்கை. கழற்றிப் போட்ட உடைகள் தலைமாட்டில் காத்திருக்க, குறுகிய இரவு அலாரம் அடிக்க, மீண்டும் மாட்டிக்கோண்டு பனிகூழுக்குள் கால்கள் புதைய ஓட்டம். மாத இறுதியில் மிஞ்சியதை பிய்த்துப் பிரித்து அனுப்பிவிட்டு உடலும் மனமும் களைத்துக் காலில் விழ, மீண்டும் தொடரும் வேண்டாம் என்று சொல்ல முடியா முடிவில்லா மெளனப் பயணம்!!!!!
So so How Are u Doing ???